உலகம் செய்திகள்

தென் கொரியாவில் ஒரேநாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. இந்த வார தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 4 லட்சமாக இருந்தது.

இந்த நிலையில் தென் கொரியாவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அங்கு ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் நேற்று முன்தினம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

சியோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங் நாட்டிலும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து இருக்கிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.

வியட்நாமில் நேற்று ஒரே நாளில் 1.63 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Related posts

கனடா பாணியில் பாரிஸிலும் வாகனப் பேரணிக்கு முஸ்தீபு?

namathufm

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கம்!

Thanksha Kunarasa

15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் !

namathufm

Leave a Comment