உக்ரைன் அகதிகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய வாகனத்தை, பிரித்தானிய முன்னாள் அதிபர் டேவிட் கேமரூன் கொண்டு சென்றுள்ளார்.
முன்னதாக தான் போலந்து செல்வதினை ஊடகங்களுக்கு டேவிட் கேமரூன் அவர்கள் தெரிவித்திருந்தார். அவர் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள தொண்டு நிறுவனமான சிப்பி லார்டில் இருந்து இருவருடன் சேர்ந்து போலாந்து சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் டேவிட் கேமரூன் கூறுகையில், நாப்கின் முதல் மக்களுக்கு தேவையான முதலுதவி பொருட்கள் அடங்கிய லொறியை கொண்டு வந்துள்ளோம்.
மேலும் உக்ரைன் அகதிகளுக்கு போதுமான நன்கொடைகளையும் சேகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.