இலங்கை செய்திகள்

இலங்கையில் பால் மாவின் விலை சடுதியாக உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும், 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கடந்த 7ம் திகதி வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், ஒரு கிலோ பால் மாவின் விலை 600 ரூபாவினாலும், 400 கிராம் பொதியின் விலை 260 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

உலக சந்தையில் ஒரு கிலோ பால் மாவின் விலை 2.80 அமெரிக்க டொலர்களில் இருந்து 5.30 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 202 ரூபாவில் இருந்து 280 ரூபாவாக அதிகரித்தமையே விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் லொறி – 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!

namathufm

ஜனாதிபதி வீட்டின் முன் ஒருவர் தற்கொலை!

Thanksha Kunarasa

நாளாந்தம் ஒரு இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ

Thanksha Kunarasa

Leave a Comment