இலங்கை செய்திகள்

மாலைதீவில் அமைச்சர் நாமல் ராஜபக்ச நீச்சல் – சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு.

மாலைதீவில் அமைச்சர் நாமல் ராஜபக்ச நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நாமல்ராஜபக்ச மாலைதீவில் பிளைபோர்டிங் ஜெட்ஸ்கை போன்றவற்றில் ஈடுபடுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
 
அவர் பின்னர் விருதுவழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்- இந்த நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதியும் கலந்துகொண்டுள்ளார். நாடு கடும்பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் மாலைதீவிற்கு சென்றமைக்காக சமூக ஊடகங்களில் பலர் நாமல் ராஜபக்சவை கண்டித்துள்ளனர். எனினும் அமைச்சர் மாலைதீவிற்கு செல்லும் தனது முடிவை நியாயப்படுத்தினார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.


மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சு நடத்தும் விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்விற்காக நான் மாலைதீவிற்கு ஒரு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்,மாலைதீவு இலங்கைக்கு நெருக்கமான நாடு -விளையாட்டு மற்றும் இளைஞர்கள் குறித்து எங்களிற்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது,என அவர் தெரிவித்துள்ளார்

தனது பயணத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஒளிந்திருப்பதன் மூலம் நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது நாங்கள் மக்கள் மத்தியில் சென்று சுற்றுலாப்பயணம் செய்வதற்கு இலங்கை பாதுகாப்பான இடம் என்பதை ஊக்குவிக்கவேண்டும்,விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறையில் மாலைதீவு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது,மாலைதீவில் வேலைவாய்ப்புகளை கண்டறியவேண்டும், மாலைதீவு இலங்கை இளைஞர்களிற்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இலங்கை உலகநாடுகளை நோக்கி கரங்களை நீட்டவேண்டும்,ஒளிந்திருந்து கொண்டு நாங்கள் முறைப்பாடு செய்ய முடியாது, நாங்கள் தீர்வை காணவேண்டும், நாங்கள் மக்களின் விரக்தி நிலையை புரிந்துகொள்கின்றோம் ஆனால் இதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆவின் தயாரிப்பு இனிப்பு வகைகளின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது.

namathufm

உக்ரைனில் கண்ணிவெடிகளை கண்டுபிடித்த மோப்பநாய்

Thanksha Kunarasa

மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று

Thanksha Kunarasa

Leave a Comment