கடந்த 2021 ஆம் ஆண்டு டிசெம்பரிலிருந்து திபெத்தில் மூன்று புத்தர் சிலைகளை சீனா அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திபெத்தியர்களின் மத மரபுகளை முத்திரை குத்துவதற்காக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திபெத்திய புத்த சிலைகளை சீன அரசாங்கம் இடித்துள்ளது.
சீனர்கள் புத்த சிலைகளை அழிப்பதன் நோக்கம், திபெத்தியர்களின் நம்பிக்கையையும், திபெத்திய மரபுகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் உரிமையையும் ஒழிப்பதாகும்.
இந்த சம்பவங்கள் சீனாவின், புதிய ஒடுக்குமுறை மற்றும் கலாச்சார இனப்படுகொலையின் நேரடியான நிகழ்வைக் குறிக்கிறது.
99 அடி புத்தர் சிலையை அதிகாரிகள் இடித்த சில வாரங்களுக்குப் பிறகு, ஜனவரி தொடக்கத்தில் டிராகோவில் வேறு மடாலயத்தில் உள்ள மற்றொரு பாரிய சிலையும் அழிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையானது மூன்று அடுக்கு அமைப்பை கொண்ட சுமார் 40 அடி உயரமான சிலையாகும் . அதன் அழிவுக்கான காரணங்கள் குறித்து எந்த விளக்கமும் இல்லை என்றாலும், இது பிராந்தியத்தில் உள்ள திபெத்திய மதத் தளங்களை இடிக்கும் சீன அரசாங்கத்தின் கொள்கைகளை வெளிப்படுத்துவதாக நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்கள் விசனம் வெளிட்யிட்டுள்ளனர்.
இதேபோல், 44 பிரார்த்தனை சக்கரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரார்த்தனைக் கொடிகளுடன் காம் டிராகோவில் உள்ள காடன் நாம்கல்லிங் மடாலயத்தில் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மைத்ரேய புத்தரின் 99 அடி சிலையும் சீனாவால் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.