இலங்கை செய்திகள்

பொலிஸ் ஜீப் விபத்து பொலிஸ் சாரதி வைத்திய சாலையில் அனுமதி!

நுவரெலியா டயகம பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப் வாகனம் விபத்துக்குள்ளானதில் அந்த வாகனம் செலுத்தி சென்ற சாரதி கடும் காயங்களுக்கு உள்ளாகி டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம நகரத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு திரும்பும் வழியில் இன்று 18 திகதி மாலை 2.30 மணி அளவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் டயகம பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான பொலிஸ் ஜீப் வாகனமே இவ்வாறு விபத்துத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனம் பாதையை விட்டு விலகி 15 அடி உயரத்திலிருந்து தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது வாகனத்தில் சாரதியும் பொலிஸ் நிலைய அதிகாரியும் சென்றுள்ளனர். கெப் ரகவாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளது. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. விபத்து தொடர்பான விசாரணைகளை டயகம போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு சாரதி உயிரிழப்பு

Thanksha Kunarasa

யாழில் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

Thanksha Kunarasa

வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு திடீர் இடமாற்றம்

Thanksha Kunarasa

Leave a Comment