உலகம் செய்திகள்

பிரித்தானியாவில் பணவீக்க அபாயம்

பிரித்தானியாவில் பணவீக்கமானது மேலும் அதிகரிக்க கூடும் என பேங் ஒப் இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீடித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியில் பணவீக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவில் பணவீக்கமானது அடுத்த மாதமளவில் 8 வீதமாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேங் ஒப் இங்கிலாந்து நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.

வங்கி அதன் வட்டி விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகள் அதிகரித்து 0.75 வீதமாக உயர்த்தியுள்ளது. எரிசக்தி கட்டணங்கள் மற்றும் உணவு செலவுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக மேலும் விலைகள் உயரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நெடுந்தீவு கடலில் மாயமான கடற்படை வீரர் சடலமாக மீட்பு!

Thanksha Kunarasa

அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை

Thanksha Kunarasa

வீடொன்றில் தீ விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

Thanksha Kunarasa

Leave a Comment