பண்டாரவளையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் பதுளையில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வரும் பாடசாலை பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதிகள் உட்பட ஐவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். காயங்களுக்கு உள்ளான நபர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலதிக சிகிச்சைகளுக்காக பேருந்தின் சாரதிகள் இருவர் உட்பட 21 வயதுடைய தாய் ஒருவரும் பதுளை வைத்தியச்லைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டு பாடசாலை மாணவர்களும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பதுளையில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து பசறை நகர் பகுதிக்கு சென்று மாணவர்களை இறக்கி விட்டு குறைந்த அளவிளான மாணவர்களுடன் பசறை நமுனுகுல வீதியில் அம்பலம பகுதிக்கு செல்கையிலேயே பசறை நமுனுகுல வீதி 10 ம் கட்டைப் பகுதியில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது. இரு பேருந்துகளும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.