இலங்கை செய்திகள்

தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் அச்சிடுவதில் பாதிப்பு – கடதாசி தட்டுப்பாடு

கடதாசி தட்டுப்பாடு காரணமாக வினாத்தாள் அச்சிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்தார்.

இந்நிலைமையை கருத்திற் கொண்டு 09, 10 மற்றும் 11 ஆம் ஆண்டுகளுக்கான தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறும், பாடசாலை மட்டத்தில் ஆரம்ப தரப் பரீட்சைகளை முடிந்தால் மாத்திரம் நடத்துமாறும் அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள்கள் தட்டுப்பாடு காரணமாக இம்முறை தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் அச்சிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கமும் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் காரணமாக வினாத்தாள்களை அச்சிடாமல் வன்தட்டில் சேமித்து அதிபர்களிடம் ஒப்படைக்க மேல்மாகாண கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை

Thanksha Kunarasa

இலங்கை விடயத்தில் பின்வாங்கிய சர்வதேச நாணய நிதியம்

Thanksha Kunarasa

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை!

Thanksha Kunarasa

Leave a Comment