இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை விமர்சித்த பெண் ஊடகவியலாளர் – நிகழ்ச்சிகளில் நீக்கப்பட்டார்.சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!

சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்த ரூபவாஹினி ஊடகவியலாளர் பரமி நிலப்த ரணசிங்க அவரது நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கப்பட்டமை அரசாங்கம் ஊடகவியலாளர்களை கண்காணிக்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை குறித்த தனது உணர்வுகளை முகநூல் ஊடாக வெளிப்படுத்தியமைக்காக என்னை ரூபவாஹினியிலிருந்து தடை செய்துள்ளனர் என பெண் ஊடகவியலாளர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். தனது சேவைகள் இனிமேலும் தேவையில்லை என தனது நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் என பெண் ஊடகவியலாளர் தங்களிடம் தெரிவித்துள்ளார் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

உயர் மட்டத்திலிருந்து வந்த உத்தரவின் பேரிலேயே தாங்கள் இதனை தெரிவிப்பதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளனர், என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம் அரசமைப்பு ரீதியில் ஒருவருக்கு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள கருத்து பேச்சு சுதந்திரத்தை மீறுகின்றது என தெரிவித்துள்ளது.பெண் ஊடகவியலாளர் தனது சமூக ஊடக பதிவிலேயே இந்த விமர்சனத்தை முன்வைத்திருந்தார், ஒரு தரப்பு இதனை கண்காணித்து அரசாங்கத்தை எச்சரிக்கின்றது என்றால் அது பாரதூரமான விடயம், பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள் என்பதை அது வெளிப்படுத்துகின்றது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. ஒரு பிரஜை என்ற அடிப்படையில் பேச்சு, கருத்து சுதந்திரம் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்ற தருணம் இது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

Related posts

50-வது நாளில் உக்ரைன் – ரஷ்யா போர் அமைதியை வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்

Thanksha Kunarasa

பிலிப்பைன்சில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி

Thanksha Kunarasa

இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு – மத்திய வங்கி ஆளுநர்.

Thanksha Kunarasa

Leave a Comment