இலங்கை செய்திகள்

மோடியை சந்தித்தார் பசில்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார்.

இதன்போது, இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக புதுடெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா மற்றும் மீன்வளம் குறித்து இதன்போது கருத்துகள் பரிமாறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை, இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்துவது மற்றும் அத்துறைக்கு இந்தியாவில் இருந்து கிடைக்கும் தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை:

Thanksha Kunarasa

யுக்ரேன் போர்: கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – எச்சரிக்கும் உலக வங்கி

Thanksha Kunarasa

விசேட நெருக்கடிகால மாநாட்டில், மாநாட்டில் மக்ரோன் எச்சரிக்கை! ரஷ்யாவுக்கு ஆடம்பர பொருள்களது ஏற்றுமதியை நிறுத்தியது ஐரோப்பா!

namathufm

Leave a Comment