உலகம் செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் – மீண்டும் வென்றால்.. – நாட்டுக்கான திட்டங்கள் அறிவிப்பு!

படைத் துறைகளுக்கு அதிக முதலீடு ரிசேர்வ் பிரிவு இரு மடங்காக்கப்படும்.தஞ்சம் கோரலில் மீள் மனுக்களைகுறைத்து திருப்பி அனுப்பும் முறைவேலை தேடும் “போல் எம்புளுவா” “France Travail” என்று மாற்றப்படும்சும்மா இருந்து RSA பெற முடியாது சிறிய வேலை செய்வது அவசியம் அதிபர் மக்ரோன் பாரிஸ் ஒபவிலியேவில் (Docks de Paris, Aubervilliers – SeineSaint-Denis) அமைந்துள்ள பிரமாண்டமான ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

வெற்றியீட்டினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைவருக்கும் தொழில் என்ற இலக்கே தனது பிரதான வாக்குறுதி என்பதை மக்ரோன் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது கடந்த ஐந்து ஆண்டு ஆட்சிகாலத்தில் தொழில் இல்லாதவர்களது வீதம் அதற்கு முந்திய 15 ஆண்டு காலத்துக்குப் பின்னர் வீழ்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள முதற் சுற்று வாக்கெடுப்பில் அவர் தொடர்ந்தும் முதனிலையில் இருப்பதைக் கணிப்புகள் வெளிப்படுத்தி வருகின்றன. வாக்களிப்பு தினத்துக்கு மிகக் குறுகிய கால இடைவெளி இருக்கையிலேயே போட்டியிடும் முடிவை வெளியிட்ட அவர், பெரும் பரப்புரைகள், எதிரணி வேட்பாளர்களுடனான பொது விவாதங்கள் என்று எதனையும் நடத்த முன்வராமலே தேர்தலைச் சந்திக்கிறார்.

முக்கிய வேட்பாளர்கள் அது குறித்துத் தங்கள் ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ளனர். அத்துடன் உக்ரைன் போர் நெருக்கடி மக்ரோனின் தேர்தல் நிகழ்ச்சி நிரல்களில் கடைசி நேரத்தில் பெரும் தாமதங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. இன்று அவர் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் அவரது அடுத்த ஐந்து ஆண்டுகாலத்துக்கான திட்டத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு :

🔵புகலிடம் வழங்கும், மறுக்கும் நடைமுறைகள் மறுசீரமைக்கப்படும். தஞ்சம் மறுக்கப்பட்டோர் நாடு திரும்ப வேண்டும் என்பது கோரிக்கையாளர்களது பொறுப்பாக்கப்படும். அத்தகையோர் மீள மனுச் செய்வது அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தாமதமாக்குவதால் அந்த விதிகளை மாற்றுவது உட்பட குடியேற்ற விதிகள் மறுசீரமைப்பு.

🔵தொழில் இழப்புக்கான கொடுப்பனவு, புதிய தொழில் தேடுவோருக்கான சேவைகள் என்பவற்றை நிர்வகித்துவரும்”போல் எம்புளுவா” (Pôle emploi) மறுசீரமைக்கப்பட்டு “France Travail” என்ற பெயருக்கு மாற்றப்படும்.

🔵நீண்ட காலத் தொழிலாளர்களது ஓய்வு பெறும் வயது எல்லை 62 இல் இருந்து 65 ஆக உயர்த்தப்படுகிறது. ஓய்வூதியத் தொகை குறைந்தது 1,100 ஈரோக்களாக நிர்ணயிக்கப்படும்.

🔵வருமானங்கள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற RSA என்கின்ற மாதாந்த அரச நிதி உதவிக் கொடுப்பனவு (Revenu de solidarité active) பெறுவதற்கு வாரத்தில் 15-20 மணித்தியாலங்கள் ஏதாவது பணியில் அல்லது தொழில் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

🔵நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் மேலும் அதிகரிக்கப்படும். குறிப்பாகப் படைத் துறைகளுக்கு நவீன தொழில் நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக நிதி வசதி அளிக்கப்படும். தீவிரமான போர்களை எதிர்கொள்கின்ற நிலைமை திரும்பியிருப்பதால் நாட்டின் ரிசேர்வ் படையின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும்.

🔵ஆசிரியர்களது மாதாந்த ஊதியத்தை மிகச் சிறந்த தரத்துக்கு மாற்றுதல். நிர்வாகச் செயற்பாடுகளில் பாடசாலைகளுக்கு அதிக சுதந்திரம், பாடசாலைகளோடு குடும்பங்களை மிக நெருக்கமாக்குவதற்கான புதிய திட்டங்கள். பள்ளிகளிலும் இணைய வழியிலும் நடத்தப்படும் துன்புறுத்தல்களில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் விதமான சூழலை உறுதிப்படுத்துதல்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

முகக்கவச தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை

Thanksha Kunarasa

கனடா பாணியில் பாரிஸிலும் வாகனப் பேரணிக்கு முஸ்தீபு?

namathufm

சாதாரணமாக நினைத்த ஒமிக்ரோனின் கோரத் தாண்டவம் .. !!

namathufm

Leave a Comment