உலகம் செய்திகள்

சுவீடனை ஒத்த நடு நிலை நாடு: ரஷ்யா முன் வைத்த நிபந்தனை நிராகரித்தார் உக்ரைன் அதிபர்!

ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் தலைநகர் கீவில் ஊடரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த வேளையிலும் பெரும் சண்டை வெடிக்கக் கூடியதான நிலைமை இருப்பதை சுயாதீனச் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். போர் அதன் உச்சக் கட்டத்தை நெருங்கவுள்ள நிலையில் ரஷ்யா – உக்ரைன் இரு தரப்புப் பிரதிநிதிகள் இடையே சமாதானப் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.படையெடுப்பை நிறுத்த வேண்டுமாயின் உக்ரைன் அணி சேராமல் நடு நிலை பேணும் விதமான “விட்டுக்கொடுப்புக்கு” முன்வர வேண்டும் என்று ரஷ்யத் தரப்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

பனிப்போர் காலத்தில் சுவீடன், ஒஸ்ரியா போன்ற நாடுகள் மேற்கு – கிழக்கு என எந்தப் பக்கமும் சாராமல் வகித்த நடுநிலையை ஒத்த ஒரு நிலைப்பாட்டை உக்கரைன் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் நிபந்தனையை உக்ரைனின் சுயாதிபத்தியத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்ற நிபந்தனை என்று கூறி அதிபர் ஷெலன்ஸ்கி நிராகரித்து விட்டார். போர் தொடங்கிய பிறகு இருதரப்பினரும் சந்திக்கின்ற நான்காவது சுற்றுப் பேச்சுக்கள் தற்சமயம் நடை பெறுகிறது. உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் அணி சேர்வதைத் தடுப்பதற்காக ரஷ்யா அதன் மீது படையெடுப்பை மேற்கொண்டுள்ளது. ரஷ்யா தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்குச் சொல்லும் முதன்மைக் காரணம் உக்ரைன்-நேட்டோ இணைப்பு விடயம் ஆகும். ஆகவே நேட்டோவில் இணைவதில்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். நேட்டோவில் இணைவது என்ற உக்ரைனின் அபிலாசையில் “சமரசம்” செய்யும் கட்டம் ஏற்படலாம் என்று அதிபர் ஷெலன்ஸ்கி ஓரிரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையிலே பேச்சுக்களில் சிறிதளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதை இருதரப்புகளும் ஒப்புக் கொண்டுள்ளன.அனால் அவை இன்னமும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரவில்லை. இருதரப்பு சமாதானப் பேச்சுக் குழுக்களது தலைவர்களுடன் தொடர்புடையவட்டாரங்கள் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளன.

*நேட்டோவில் இணைவதற்கான தனது அனைத்து நம்பிக்கைகளையும் உக்ரைன் கைவிட வேண்டும் – (Ukraine drops all ambitions to join NATO)

*ஏனைய நாடுகளது தளங்கள் எதுவும் உக்ரைனுக்குள் இருக்காது என்பதை அது உத்தரவாதப்படுத்த வேண்டும்- (Ukraine promises that other countries may not have bases in the country.)

*வெளிநாட்டுப் படைகளோ ஆயுதங்களோ நாட்டுக்குள் வராது என்பதைகீவ் உறுதிப்படுத்த வேண்டும் – (Ukraine guarantees that foreign soldiers and foreign equipment must not enter)-

இந்த மூன்று நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டால் போரை நிறுத்தித் தனது படைகளைத் திருப்பி அழைப்பதாக மொஸ்கோ தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இருதரப்பு முரண்பாட்டுக்கு அடிப்படைக் காரணங்களாகிய இந்த மூன்று விவகாரங்களையும் ஏற்பதானால், தனது முக்கிய நிபந்தனை ஒன்றை வெளி நாடுகளது முன்னிலையில் ரஷ்யா எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என உக்ரைன் கேட்டிருக்கிறது. எதிர்காலத்தில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முற்பட்டால் நேட்டோ நாடுகள் இராணுவ உதவி அளிப்பதை உடன்படிக்கை மூலம் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று அது கேட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உடன்படிக்கையாக வருவதற்கு கிட்டத்தட்ட – தோராயமான -(approximate agreement) வாய்ப்புகள் காணப்படுகின்றன என்று தொடர்புடைய வட்டாரங்களில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – சுகாதார அமைச்சர்

Thanksha Kunarasa

உக்ரைனின் கிழக்கே டொன்பாஸில் தனி நாடுகளுக்கு புடின் அங்கீகாரம் !!

namathufm

தென்ஆப்பிரிக்காவில் 2 புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment