இலங்கை செய்திகள்

சில பொருட்களுக்கு இறக்குமதி பண்ட வரி விதிப்பு

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு இறக்குமதி பண்ட வரியை விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் திராட்சை மற்றும் ஆப்பிள் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் தோடம்பழம் மற்றும் பேரீச்சம்பழம் 200 ரூபாவாகவும் ,ஒரு கிலோ கிராம் தயிருக்கான பண்ட வரி 1000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பு மார்ச் மாதம் 10 ஆம் திகதி முதல், அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வரி அதிகரிப்பினால் குறித்த பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்ய ஜனாதிபதியின் சிலையை வெளியேற்றிய பிரான்ஸ் அருங்காட்சியகம்

Thanksha Kunarasa

யாழ் அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு

Thanksha Kunarasa

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு சாரதி உயிரிழப்பு

Thanksha Kunarasa

Leave a Comment