இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவர் கைது!

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக் கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை இரண்டு கஞ்சா செடிகளுடன் இன்று வியாழக்கிழமை (17) கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் வீட்டின் மூன்றாவது மாடியின் மேல் பூச்சாடிகளுடன் பூச்சாடிகள் வளர்ப்பது போல கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ள நிலையில், பொலிசார் இரண்டு கஞ்சா செடிகளை மீட்டதுடன் 33 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பதை அவதானித்து வருகின்றேன் – நியுசிலாந்து பிரதமர்

namathufm

இலங்கையில், அனைத்து அரச பணியாளர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்

Thanksha Kunarasa

பெற்றோல், டீசல் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment