உலகம் செய்திகள்

கடத்தப்பட்ட உக்ரைன் நகர மேயர் விடுவிப்பு

உக்ரைனின் மெலிட்டோ போல் நகர மேயரை கடந்த வாரம் ரஷிய படையினர் கடத்தி சென்றனர். அவர் ரஷிய படைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் கடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியது.

கடத்தப்பட்ட மேயரை மீட்பதற்கான நடவடிக்கைகளை உக்ரைன் எடுத்து வந்தது.

இந்த நிலையில் மெலிட்டோ போல் நகர மேயர் ரஸ்யாவினால் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

அவரை மீட்பதற்காக உக்ரைன் ராணுவம், தான் பிடித்து வைத்திருந்த 9 ரஷிய வீரர்களை திருப்பி அனுப்பியது.

ரஷிய வீரர்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டதையடுத்து உக்ரைன் நகர மேயரை ரஷிய படை விடுவித்து உள்ளது.

Related posts

வான்பாய்கிறது இரணைமடுக் குளம்!

Thanksha Kunarasa

சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

Thanksha Kunarasa

இலங்கையில் ஊழலைக் கையாள்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் தொடர வேண்டும் IMF முகாமைத்துவப் பணிப்பாளர்!

namathufm

Leave a Comment