உலகம் செய்திகள்

இஸ்ரேலில் புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிய வகை வைரஸ் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. பின்னர் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா,நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற உருமாறிய கொரோனா வைரசை விட ஒமைக்ரான் மிகவும் வேகமாக பரவக் கூடியது என்று எச்சரிக்கப்பட்டது. அதன்படி ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இஸ்ரேலில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது ஒமைக்ரானின் 2 துணை வகைகள் இணைந்து புதிய வைரஸ் தோன்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த புதிய வகை வைரஸ் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த மாறுபாடு இன்னும் உலகம் முழுவதும் கண்டறியப்படவில்லை என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பு டெல்டா வகை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து ‘டெல்டாக்ரான்’ உருவானதுபோல் ஒமைக்ரானின் வைரசின் துணை வகைகளான பி.ஏ.-1 மற்றும் பி.ஏ.-2 ஆகியவை இணைந்து புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.

Related posts

பாரிஸ் வேர்சாய் அரண்மனையில் 27 ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் கூடும் விசேட போர்க்கால மாநாடு சுற்றி வரப் பொலீஸார் கடுங் காவல்

namathufm

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரீட்சித்தது ரஷ்யா

Thanksha Kunarasa

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

namathufm

Leave a Comment