இலங்கை செய்திகள்

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்களின் அறிவிப்பு

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக செயல்முறையை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

உற்பத்தியை தொடங்குவதற்கு எரிவாயு சரக்குகளை பெறாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில், வீடுகளில் சமையலுக்காக எரிவாயுவினை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் எரிவாயு விநியோக மையங்களுக்கு வெளியே வரிசையில் காத்திருப்பதை பரவலாக காண முடிகிறது.

இந் நிலையில் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையினை தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இதுவரை சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதுடன், அரசாங்கத்திற்கு எதிராக தமது அதிருப்தியினையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந் நிலையில் லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்களின் இவ் அறிவிப்பினால் மக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

Related posts

ஹப்புத்தளையில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்.

namathufm

இலங்கை நாணயத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Thanksha Kunarasa

பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்க – சட்டமா அதிபர்

namathufm

Leave a Comment