உலகம் செய்திகள்

பாரிஸ் ஈபிள் கோபுரம் ஆறு மீற்றர் வளர்ந்தது – உச்சியில் அன்டெனா!

பாரிஸ் ஈபிள் கோபுரம் ஆறு மீற்றர் வளர்ந்தது தொடு திரை வானொலிக் காலம் இது. பாரிஸ் பிராந்தியம் முழுவதும் டிஜிட்டல் வானொலி சேவையை வழங்கும் நவீன அன்டெனா ஒன்று ஈபிள் கோபுரத்தின் உச்சியில் நேற்று ஹெலிக்கொப்ரரின் உதவியுடன் பொருத்தப்பட்டது. அந்தக் காட்சிகளையே படங்களில் காண்கிறீர்கள்.

இல்-து-பிரான்ஸ் பிராந்தியம் முழுவதையும் உள்ளடக்கி இயங்குகின்ற டிஜிட்டல் வானொலி நிலையங்களுக்காக இந்த digital terrestrial radio (DAB+) அன்டெனா நிறுவப்பட்டுள்ளது. ஆறு மீற்றர் உயரம் கொண்ட அன்டெனா உச்சியில் பொருத்தப்பட்டதை அடுத்து ஈபிள் கோபுரத்தின்உயரம் 330 மீற்றர்களாக உயர்ந்துள்ளது. உலகப் புகழ் அதிசயங்களில் ஒன்றாகிய இரும்புக் கோபுரத்தின் சாதாரண உயரம் 324 மீற்றர்கள் ஆகும்.

கோபுரத்தின் உச்சியில் ஏற்கனவே சில தொலைத் தொடர்பு அன்டெனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை விட உயரமான இந்த DAB+ அன்டெனா, கிட்டத்தட்ட 30 டிஜிட்டல் டெரஸ்ட்ரியல் தொலைக்காட்சி (DTT) சனல்களையும் 32 வானொலி நிலையங்களையும் சுமார்12 மில்லியன் இல்-து-பிரான்ஸ் (Ile-de-France) குடியிருப்பாளர்களுக்கு ஒளி, ஒலிபரப்ப அனுமதிக்கிறது. பாரிஸ் நகரசபை, பொலீஸ் தலைமையகம், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகிய தரப்புகளின் அனுமதியுடன் அன்டெனா பொருத்தும் பணி சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடந்தேறியது.இதற்காக கோபுரம் அமைந்துள்ள Champ de Mars பகுதி பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தது. பெரும் எண்ணிக்கையான செய்திப் படப்பிடிப்பாளர்கள் அன்டெனா பொருத்தப்படும் காட்சியைப் பதிவு செய்வதற்காக அங்கு கூடியிருந்தனர்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

யாழ் அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு

Thanksha Kunarasa

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 3 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

Thanksha Kunarasa

ரம்புக்கனையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்

Thanksha Kunarasa

Leave a Comment