இலங்கை செய்திகள்

ஒரே நாளில் இலங்கையில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம்

இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியிடம் நேற்றுமுன்தினம் திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை 1,543.97 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது

ஆனால், இந்தத் தொகை கடந்த 11ஆம் திகதி 1, 521.69 பில்லியன் ரூபாவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் வசம் உள்ள திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை நேற்றுமுன்தினம் 22.27 பில்லியன் ரூபாவால் அதாவது 2,227 கோடி ரூபாவால் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி 22.27 பில்லியன் ரூபா அல்லது 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது.

மத்திய வங்கி புதிய நாணயத்தை வெளியிடுவதற்கு ‘பணம் அச்சிடுதல்’ என்ற பொதுவான சொல்லையும் பயன்படுத்துகிறது. அவ்வாறாயின் நேற்றுமுன்தினம் மாத்திரம் 2 ஆயிரத்து 227 கோடி ரூபாவை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.

Related posts

கடவத்தையிலுள்ள முன்னணி ஆடை விற்பனை நிலையத்தில் கொள்ளையிட முயன்றவர் கைது

Thanksha Kunarasa

கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

Thanksha Kunarasa

துப்பாக்கி சூட்டுக்கான காரணத்தை கூறிய பொலிஸ்மா அதிபர்!

Thanksha Kunarasa

Leave a Comment