உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் போலந்து, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா நாடுகளின் பிரதமர்கள் உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கு செல்கின்றனர்.
உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் இப்பயணத்தை உறுதிப்படுத்தியது.
ரஷ்யா அதன் அண்டை நாடுகளை ஆக்கிரமித்த பின்னர் உக்ரேனிய தலைநகருக்கு பயணம் செய்யும் முதல் வெளிநாட்டுத் தலைவர்கள் இவர்களே.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் எப்போதும் உதவியாக இருக்கும் என்பதை தெரியப்படுத்தும் வகையில், மூன்று நாட்டு பிரதமர்களும் உக்ரைனுக்கு நேரில் செல்கின்றனர்.
போர் உக்கிரமடையும் சூழலில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.