இலங்கை செய்திகள்

IMF பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் Changyong Rhee மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (15) இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் மேற்கொண்ட மீளாய்வு முடிவுகளை ஜனாதிபதிக்கு அறிவிப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி நேற்று (14) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழில் நேற்று 16 கொரோனா தொற்றாளர் !

namathufm

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த இந்திய போர் கப்பல்கள்!

Thanksha Kunarasa

அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்ல தடை

Thanksha Kunarasa

Leave a Comment