சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் சாங்யோங் ரீ, சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஹேன்-மெரீ கல்ட்-ஹுல்ப் மற்றும் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் வசிப்பிட பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் பெரிடானுசெடியாவன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதி பிரதான ஆலோசகர் லதித் வீரதுங்க, மேலதிக செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க ஆகியவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.