உலகம் செய்திகள்

சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா மிரட்டி வருகிறது.

கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்குள்ள 19 மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிலின் மாகாணத்தில் பாதிப்பு உச்ச கட்டத்தை எட்டி உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவால் பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஹாங்காங் எல்லைக்கு அருகில் உள்ள ஷென்சென் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் 1.7 கோடி மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தோன்றியது. அங்குள்ள வுகான் நகரில் உருவான இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி 2 ஆண்டுகளாக பீதியை ஏற்படுத்தி வருகிறது.

Related posts

ஐபிஎல் தொடரின் 24வது போட்டியில் குஜராத் அணி வெற்றி

Thanksha Kunarasa

ஜார்ஜியாவில் ஏப்ரல் 2 ஆம் திகதி இந்து புத்தாண்டாக அறிவிப்பு!

Thanksha Kunarasa

IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

Thanksha Kunarasa

Leave a Comment