இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவியை கோருகின்றது இலங்கை!

தனது வெளிநாட்டு நாணய கையிருப்பை அதிகரிப்பதற்காகவும் உக்ரைன் யுத்தத்தினால் சிக்கல் மிகுந்ததாக மாறியுள்ள கடன்களை மீள திருப்பி செலுத்துவதை கையாள்வதற்காகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ள இலங்கை தனது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிதிகளுடன் ஜனாதிபதி கோத்தபாயராஜபக்ச திங்கட்கிழமை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். ஏப்பிரல் மாத முற்பகுதியில் இலங்கை அரசாங்க அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திடம் கொள்கை யோசனைகளை முன்வைப்பார்கள் என விடயங்கள் குறித்து நன்கறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படாததால் தங்கள் பெயர்களை தெரிவிக்க வேண்டாம் என அவர்கள் குறிப்பிட்டனர். நிதியமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ச முன்வைத்துள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் திட்டத்தினை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது என காணி அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்தார்.

மிகமோசமான பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு திண்டாடுகின்ற இலங்கை சர்வதேச நாணய நிதியம் குறித்த தனது இறுக்கமான கொள்கையில் தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. சர்வதேச கொள்கை வகுப்பாளர்கள் உக்ரைன் ரஷ்ய நெருக்கடி குறித்து கவனம் செலுத்துவதால் சீனாவும் இந்தியாவும் இரு தரப்பு கடன் வழங்கும் செயற்பாடுகளை தாமதித்துள்ளன. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானவர்கள் முன்னர் சோவியத்யூனியனில் இடம் பெற்றிருந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மோதல் காரணமாக இந்த முக்கிய வருவாய் வீழ்ச்சியடையப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

Related posts

இலங்கையில், மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அறிவிப்பு

Thanksha Kunarasa

பெண் எம்.பிக்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்?

namathufm

நல்லூர் ஆலய சூழலில் கிறீஸ்தவ மதமாற்ற சுவரொட்டிகள்! சிவசேனை அமைப்பு சீற்றம்.

Thanksha Kunarasa

Leave a Comment