இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் இன்று கொழும்பில்

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (15) கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள மக்கள் இன்று ஒரு துரதிஷ்டமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த அரசாங்கத்தை இனியும் இந்த நாட்டை ஆள அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தயவுசெய்து ஆட்சியை விட்டு வெளியேறி, இந்த நாட்டை ஆளக்கூடிய ஒரு குழுவைத் தேர்தல் ஊடாக தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் கோவிலுக்கு வருகை தந்தவர் மயங்கிவிழுந்து மரணம்

Thanksha Kunarasa

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 60 பேருடன் பாப்பரசரை சந்திக்க கொழும்பு பேராயர் ரோம் பயணம்

Thanksha Kunarasa

அந்தமானில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்!

namathufm

Leave a Comment