இலங்கை செய்திகள்

வரலாற்றில் இல்லாத அளவு உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

இலங்கையில் வரலாற்றில் முதன்முறையாக இன்று 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை இலங்கையில் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 கரட் தங்கம் 51,600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், 22 கரட் தங்கம் 48,200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த ஆண்டு ஜுலை மாதம் இலங்கை சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை செய்கூலியுடன் சேர்த்து 124000 ரூபாவை கடந்திருந்தது.

இலங்கையில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைய ஆரம்பித்ததை தொடர்ந்தே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நாடும் கடும் பொருளாதார நெருக்கடியை அடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலங்கையில் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்.

Thanksha Kunarasa

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச் சீட்டு !

namathufm

ஜாக் சிராக்கிற்குப் பின்னர் – – – – – இரண்டாவது முறையும் தெரிவாகும் பிரெஞ்சு அதிபராகிறார் மக்ரோன்?

namathufm

Leave a Comment