இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் சாதனை படைத்த மாணவி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பனிக்கன் குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2021 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சையில் தவசீலன் புவணாயினி 162 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாங்குளம் – பனிக்கன்குளம் அ.த.க பாடசாலையில் 1975 ஆண்டு மாணவி ஒருவர் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றிருந்தார்.

அதன் பின்னர் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தாலும், கடந்த 47 வருடத்தின் பின்பு மாவட்ட வெட்டுப் புள்ளியைத் தாண்டி சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்த செல்வி. த.புவணாயினிக்கு பாடசாலை சமூகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்,கல்வியாளர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவி முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை; வெளிவிவகார செயலாளர்.

Thanksha Kunarasa

நாடாளுமன்றில் வெற்றியீட்டினால்ஆகக் குறைந்த சம்பளம் 1,500 ஈரோ!

namathufm

ரஸ்யாவுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம்! சீனா அறிவிப்பு!

Thanksha Kunarasa

Leave a Comment