இலங்கை செய்திகள்

பெண் எம்.பிக்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்?

இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆகியோருக்கே இவ்வாறு பதவிகள் வழங்கப்பட உள்ளது. எனினும் இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் திலும் அமுனுகம போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார். இவர் சமீபத்தில் போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன்படி, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவி வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம்

Thanksha Kunarasa

பாரிஸ் வேர்சாய் அரண்மனையில் 27 ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் கூடும் விசேட போர்க்கால மாநாடு சுற்றி வரப் பொலீஸார் கடுங் காவல்

namathufm

மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் பின் தற்போதைய நிலை.

Thanksha Kunarasa

Leave a Comment