உலகம் செய்திகள்

பராக் ஒபாமாவுக்கு ​கொரோனா!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், தொற்று பரிசோதனை செய்துகொண்டதில் தனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தானும், துணைவியார் மிக்செல்லும், தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்டிருப்பதை நினைவுக் கூர்ந்துள்ள ஒபாமா, மிச்செலுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

தொற்று பாதிப்புகள் குறைந்து வந்தாலும், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுமாறு ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிக்கை!!

namathufm

மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதி கணிசமாக உயர்வு

Thanksha Kunarasa

உக்ரைனுக்கு உலக வங்கி 723 மில்லியன் டாலர் கடனுதவி

Thanksha Kunarasa

Leave a Comment