சீனாவின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு, இரண்டு இந்திய கடற்படைக் கப்பல்கள் வந்து நங்கூரமிட்டிருந்ததாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு இந்திய கப்பல்கள், எரிபொருள் நிரப்புதல் மற்றும் ஏனைய சேவைகளுக்காக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி வந்த இந்த இரண்டு கப்பல்களும் 2 நாட்களாக அங்கு நங்கூரமிட்டுள்ளன.
ஐஎன்எஸ் ‘சென்னை’ என்ற நாசகாரி போர்க்கப்பல் மற்றும் இந்தியாவின் மேற்கு கப்பற்படையின் முதன்மைக் கப்பலான ஐஎன்எஸ் ‘டெக்’ ஆகியவையே ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிட்டுள்ளன..
கடந்த ஆண்டுகளில் ஜப்பான், இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.