உலகம் செய்திகள்

மேற்கத்திய நாடுகளின் ஆயுத வாகனங்களை தாக்குவோம்- ரஷியா எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தநிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இது குறித்து ரஷியாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்காய் ரியப்கோவ் கூறியதாவது:-

அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ரஷிய படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏராளமான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயல்.

அதுபோன்று ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ரஷிய ராணுவத்தின் சட்டப்பூர்வ தாக்குதலுக்கு இலக்குகள் என்பதை மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

உக்ரைனுக்கு வெளிநாட்டு ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்களும், ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும். ரஷியாவின் எச்சரிக்கையை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதனால் உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகள் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்பட வில்லை,என்று தெரிவித்தார்.

Related posts

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு இணையவழி ஊடாக

Thanksha Kunarasa

பொரிஸ் ஜோன்சன் உட்பட அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழையத் தடை!!

Thanksha Kunarasa

சர்வகட்சி மாநாட்டில் ரணில் கடும் சீற்றம்! மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

Thanksha Kunarasa

Leave a Comment