உலகம் செய்திகள்

சீனாவில் மீண்டும் கொரோனா

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்திலும் பரவிய இந்த வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைளில் இறங்கின. இருப்பினும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து மக்களை அச்சுறுத்தி கொண்டே இருந்தது.

கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு வெகு வேகமாக சரிந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் உருவான சீனாவில், மீண்டும் புதிய வகை வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி சீனாவில் புதிதாக 3,400 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 வருடங்களாக குறைந்திருந்த தொற்று தற்போது உயர தொடங்கி இருப் பது அந்த நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத் தியுள்ளது. குறிப்பாக ஜிலின் மாகாணத்தில் 500-க்கும் அதிகமாமோனர் பாதிக் கப்பட்டுள்ளனர்.

தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததை அடுத்து, அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரிக்கும் இடங் களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளூர் நிர்வாகங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டு வருகிறது.

அந்த வகையில் கொரோனா பரவல் அதிகமுள்ள ஷாங்காய் மாகாணத்தில் உள்ள யூசெங், ஜில்லின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் ஆகிய நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜில்லின் மாகாண சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒமைக்ரானின் மாறுபாட்டின் பரவலான இந்த வைரஸ், மிக வேகமாக பரவுகிறது. ஆரம்ப கட்டத்தில் இதனை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது என்றார்.

உலக நாடுகள் அனைத்தும் தற்போது தான் மெல்ல, மெல்ல கொரோனாவில் இருந்து விடுபட்டு பொருளாதாரத்தை மீட்டெடுத்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிதாக பரவ தொடங்கியுள்ள வைரஸ், உலக நாடுகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உலகக் கோப்பையில் முடிவுக்கு வந்த பிரேசிலின் கனவு !

namathufm

கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் மக்கள் பாரிய போராட்டம்

Thanksha Kunarasa

முல்லைதீவு யுவதி – இந்தியாவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை!

namathufm

Leave a Comment