அந்தமான் – நிகோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிச்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
திக்லிபூரில் இருந்து தென் கிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.