இலங்கை செய்திகள்

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியிட கல்வி அமைச்சு அறிவுறுதல்.

2021 தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதியன்று நடைபெற்றது. குறித்த பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் 85,446 மாணவர்களும், சிங்கள மொழி மூலத்தில் 255,062 மாணவர்களும், மொத்தமாக 340,508 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இப்பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதுடன், கொவிட்-19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக, 108 விசேட பரீட்சை நிலையங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு

Thanksha Kunarasa

இலங்கையில் இடம் பெறும் சித்திரவதைகள் தொடர்பான அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம் – பிரிட்டன்.

namathufm

புச்சா படுகொலைக்கு இந்தியா கண்டனம்

Thanksha Kunarasa

Leave a Comment