இலங்கை செய்திகள்

3500 ரூபாவால் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை குறைந்து 750 ரூபாயால் அதிகரிக்க நேரிடும் என எரிவாயு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமை, கப்பல் கட்டணம், காப்புறுதி கட்டணம், அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக உள்நாட்டில் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க வேண்டும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

தற்போது ஒரு மெற்றி தொன் எரிவாயுவின் விலை தொள்ளாயிரம் டொலர்களாக அதிகரித்துள்ளது. கப்பல் கட்டணங்கள் 31 வீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலைமை காரணமாக சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரித்தாக வேண்டும் என எரிவாயு நிறுவனங்கள் கூறியுள்ளன.

இதனடிப்படையில் தற்போது 2 ஆயிரத்து 750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 3 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்க நேரிடும் எனவும் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் சமையல் எரிவாயு விலைகளை அதிகரிப்பது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அது சம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

Related posts

சுவிஸில் மாடியில் இருந்து பாய்ந்தபிரெஞ்சு குடும்பத்தில் நால்வர் பலி!

namathufm

சீனாவில் இருந்து உரத்தைக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடல்!

editor

3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

Thanksha Kunarasa

Leave a Comment