இலங்கை செய்திகள்

நாட்டு மக்களின் தங்க நகைகள் பறி போகும் அபாயம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் தங்கள் தங்க நகைகளை இழக்க வேண்டிய நிலை வரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரிய நாட்டு மக்களை போன்று இலங்கை மக்களும் நாட்டிற்காக உதவ வேண்டும் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வரும் போது நன்மை ஏற்படும் என்று இல்லை. பாதகமான நிலையில் மக்களும் உதவ முன்வர வேண்டும்.

கொரியாவில் பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்த போது மக்கள் எப்படி உதவினார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்.

வங்குரோத்து அடைந்த கொரிய நாட்டை மீட்டெடுக்க மக்கள் முன்வந்தார்கள். தமது காதுகளில் கழுத்துகளில் இருந்த தங்க நகைகளை வழங்கினார்கள் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதுபோன்றதொரு செயலை இலங்கை மக்களும் செய்ய முன்வர வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

உக்ரைன், ரஷ்ய மோதலின் எதிரொலி! எரிபொருள், தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

Thanksha Kunarasa

தமிழக முதல்வருக்கு ரஜனிகாந்த் வாழ்த்து

Thanksha Kunarasa

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையின் சடலம் மீட்பு !

namathufm

Leave a Comment