உலகம் செய்திகள்

உங்கள் பிள்ளைகளை வேறு நாட்டில் சண்டையிட அனுப்பாதீர்கள்- உக்ரைன் அதிபர் !!

உக்ரைன் மீது ரஷ்யா 17-வது நாளாக அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் ராணுவ நிமருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் என தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில், “ரஷ்யத் தாய்மார்கள் உங்கள் பிள்ளைகளை வேறு நாட்டில் சண்டையிட அனுப்பாதீர்கள்.

உங்கள் மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்று உடனே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை அவர்கள் உக்ரைனுக்கு வந்திருந்தால் கொல்லப்படலாம் அல்லது சிறைப்பிடிக்கப்படலாம்.

உக்ரைன் இந்தப் போரை விரும்பவில்லை. ஆனால், எங்கள் நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தேவையான நடவடிக்கையை எடுப்போம்” என்று கூறியுள்ளார்.

Related posts

பிலிப்பைன்சில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி

Thanksha Kunarasa

பிரியந்த குமார படுகொலை; 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை

Thanksha Kunarasa

நாளைய தினமும் மின்வெட்டுக்கு அனுமதி

Thanksha Kunarasa

Leave a Comment