நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.
அதனடிப்படையில், ஒடோ டீசல் 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 176 ரூபாவாகவும், ஒக்டேன் 92 ரக பெற்றோல் 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 254 ரூபாவாவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 283 ரூபாவாவும் ,சூப்பர் டீசல் 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூபா 254 ரூபாவாவும் விற்பனை செய்யப்படுகிறது.