இலங்கை செய்திகள்

இந்தியா செல்கிறார் பசில்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

உயர்ஸ்தானிகராலம் இன்றையதினம் பதிவிட்ட டுவிட் பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நிதி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களை அடுத்தவாரம் இந்தியாவிற்கு வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றோம். இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார பங்குடைமையை மேலும் வலுவாக்குவதற்கான தற்போதைய முயற்சிகளை அவரது விஜயம் வலுவூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது’ என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மனநிறைவோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை!-மாவை

Thanksha Kunarasa

செய்தி நிறுவனங்களுக்கும் தடை பிரசாரத் தணிக்கைக்கு முஸ்தீபு!! “ஆக்கிரமிப்பு” என்று எழுதினால் அபராதம் என்கிறது ரஷ்யா…!!

namathufm

ஜனாதிபதி வீட்டின் முன் ஒருவர் தற்கொலை!

Thanksha Kunarasa

Leave a Comment