உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தாம் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க விரும்புவதாக அவர் ட்விட் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலமும், நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்
எனினும் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போரிடப் போவதில்லை. நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல், மூன்றாம் உலகப் போராகவே இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.