இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலை அதிகரிப்பானது இன்றைய தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தற்போது இயங்கி வரும் 6,000 பேக்கரிகளில் பெரும்பாலானவை தினசரி உற்பத்தியில் 50 வீதம் கூட இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

Related posts

உக்ரைனில் நிலைமை படுமோசம்

Thanksha Kunarasa

பாராளுமன்றில் கோட்டாவுக்கு ஆதரவாக பேசிய எம் பிக்கு 5000 ரூபா நீட்டிய சாணக்கியன் எம்பி!

Thanksha Kunarasa

தென் ஆப்பிரிக்கா வெள்ளத்தில் சிக்கி 45 பேர் பலி – 70 ஆண்டுகால இந்து கோயில் சேதம்

Thanksha Kunarasa

Leave a Comment