இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இருந்தவர்களே, ஜனாதிபதியின் புதிய பொருளாதார சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எனவே இந்த சபையினால் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சபையில், எந்தவொரு நிபுணர்களோ அல்லது புலமையாளர்களோ அங்கம் வகிக்கவில்லை.
அத்துடன் இந்தக்குழுவினரே தற்போது பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களாவர் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதில் அமைச்சர்களான பசில் ராஜபக்சவும், ஜோன்சன் பெர்ணாண்டோவும் உள்ளடங்கியுள்ளனர்
இதேவேளை, தமிழக முதலமைச்சர் நியமித்துள்ள பொருளாதார சபையில் பிரபல பொருளாதார நிபுணர்களும், புலமையாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்