கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பமாகின்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் கலந்து கொள்கின்றனர்.
இந்திய – இலங்கை இடையே கடல் எல்லையான கச்சத்தீவில், புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இந்திய-இலங்கை பக்தர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம்.
இந்திய – இலங்கை பக்தர்களிடையே இணக்கமான உறவை மேம்படுத்த, பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால், இந்த திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
இன்று ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் இருந்து 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டு படகில் 100 பக்தர்கள் புறப்பட்டுச் செல்கின்றனர்.
இதற்கான ஏற்பாட்டை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மற்றும் ராமேசுவரம் வேர்க்காடு பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ஆகியோர் செய்து வருகின்றனர் என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.