உலகம் செய்திகள்

உக்ரைன் தலைநகரை நெருங்கியது ரஷ்ய படைகள்!

ரஷ்ய படைகள், கடந்த 24 மணிநேரத்தில், யுக்ரைன் தலைநகர் கிவ்விற்கு 5 கிலோமீற்றர் அருகே நகர்ந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், வடமேற்குப் பகுதியில், தலைநகரிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் ரஷ்ய படைகள் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, ரஷ்ய படைகள் பல்வேறு வகையான 775 ஏவுகணைகளைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ரஷ்ய மற்றும் யுக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே நேற்று இடம்பெற்ற முதற்கட்ட நேரடிப் பேச்சுவார்த்தையில், போர்நிறுத்தம் தொடர்பில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்ய, யுக்ரைன் போர் 15 ஆவது நாளாகவும் நேற்று இடம்பெற்றுள்ளது.

Related posts

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுதலை

Thanksha Kunarasa

ரஷ்யா படையெடுக்காது என நம்பிய பிரான்ஸின் கணிப்புத் தோல்வியா? உளவுப் பணிப்பாளர் பதவி விலகல்!

namathufm

மின்வெட்டு மூன்றரை மணித்தியாலங்களாக குறைப்பு

Thanksha Kunarasa

Leave a Comment