இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையினை அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தயாராகி வருகிறது.இந்நிலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ கிராம் பால் மா பைக்கெட்டின் விலையானது 300 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா பைக்கெட்டின் விலையினை 120 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலையானது 5,500 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளமையினால் பால் மாவின் விலையை அதிகரிப்பதை தவிர்த்து மாற்றுவழி எதுவும் இல்லையென பால் மா இறக்குமதியாளர் சங்கத்தினர் கூறுகின்றனர். இது குறித்து நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவித்துள்ளதாகவும் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் வினவியபோது, பால் மாவிற்கு விதிக்கப்பட்டு இருந்த நிர்ணய விலை நீக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
🔴BREAKING
இதேவேளை 10.03.2022 இன்று நள்ளிரவு முதல் டீசல் விலை 75 ரூபாவினாலும் பெற்றோல் விலை 50 ரூபாவாலும் அதிகரிப்பு.