இலங்கை செய்திகள்

பாடசாலை வகுப்பறையொன்றில் இருந்து புனுகுப் பூனைகள் உயிருடன் மீட்பு

புத்தளம் ஆனந்தா தேசியப் பாடசாலை வகுப்பறையொன்றில் தாய் மற்றும் குட்டிகளுடன் மூன்று புனுகுப் பூனைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புனுகுப் பூனைகள் இன்று காலை வகுப்பறையொன்றிற்குள் இருப்பதை அவதானித்த ஆசிரியரொருவர், புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவலை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று, குறித்த புனுகுப் பூனைகளை சிரமத்திற்கு மத்தியில் உயிருடன் பிடித்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், புனுகுப் பூனைகளை புத்தளம் – செல்லக்கண்டல் வனப்பகுதியில் விடுவித்தாகவும் தெரிவித்துள்ளனர்.

இப் புனுகுப் பூனை இலங்கையில் அழிவடைந்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சுவீடன் கொட்லான்ட் தீவு அருகே ரஷ்ய போர் விமானங்கள் மீறல்!

namathufm

இலங்கை குறித்து சீனா விடுத்துள்ள அறிவிப்பு!

Thanksha Kunarasa

கண்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொலை, ஒருவர் தற்கொலை

Thanksha Kunarasa

Leave a Comment