உலகம் செய்திகள்

பிரித்தானியாவில் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு!

உக்ரைன் மீதாக ஆக்கிரமிப்பை தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பிரித்தானியா தடை விதித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை மிக வேகமாக உயர்ந்து வரும் நிலையில், விரைவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2 பவுண்டுகளை எட்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சில பகுதிகளில் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும், பெட்ரோலின் விலை 5 பெனிக் உயர்வதால் அடுத்த வாரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1.75 பவுண்டுகளாக உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவின் பொருளாதாரத்தை கடுமையாக்கும் வகையில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.

இதனிடையே, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை தடை செய்யும் நடவடிக்கை விளாடிமிர் புடினின் ஆட்சியை தண்டிக்கும், எனினும், வணிகங்களை ‘பாதிக்காத’ வகையில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

இதனிடையே, 2022ம் ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பொருட்களின் இறக்குமதியை இங்கிலாந்து நிறுத்தும் என்று வணிக மற்றும் எரிசக்தி செயலாளர் குவாசி குவார்டெங் தெரிவித்தார்.

Related posts

பிரான்ஸ் போர்தோவில் (Bordeaux) நேற்றிரவு நகர மண்டம் தீ வைப்பு !

namathufm

எரிவாயு விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்

Thanksha Kunarasa

தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு மேலும் 8 பேர் அகதிகளாக தஞ்சம் !

namathufm

Leave a Comment