ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகள் தடையை ஏற்படுத்தினால், ஜெர்மனிக்கான முக்கிய எரிவாயுக் குழாய் மூடப்படலாம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கூறுகையில்,
‘ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிராகரிப்பது, உலக சந்தையில் பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும்’ என்று கூறினார்.
இதனால் விலை இரண்டு மடங்குக்கும் மேலாக, ஒரு பீப்பாய் 300 டாலராக உயர வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
யுக்ரேன் மீதான படையெடுப்புக்கு எதிராக, அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து மேலும் சில தடைகளை ஏற்படுத்த விவாதித்துக் கொண்டு வருகின்றனர். ஆனால், திங்கட்கிழமை அன்று, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இந்த ஆலோசனைகளை நிராகரித்தன.
ஐரோப்பிய ஒன்றியம் அதன் மொத்த எரிவாயுவில் 40 வீதம், மற்றும் அதன் எண்ணெய் கொள்முதலில் 30 வீதம் ரஷ்யாவிடமிருந்துதான் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.