உலகம் செய்திகள்

உக்ரைனுக்கு உலக வங்கி 723 மில்லியன் டாலர் கடனுதவி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.

உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.

போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

உக்ரைனின் பல்வேறு குடியிருப்புகள், விமான நிலையம், அணுமின் நிலையம் உள்ளிட்டவை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில், அங்குள்ள கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

இந்நிலையில், உக்ரைன் நாட்டுக்கு சுமார் 723 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதற்கு உலக வங்கியின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது உக்ரைனில் பொருளாதார அவசர நிலையை மீட்பதற்கான நிதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழினத்தின் அடையாளம் தேசியத்தலைவரின் சிந்தனை … ! வரலாறு எனது வழிகாட்டி.

namathufm

பிரான்ஸ் வெர்டுன் நகரப் போர் அழிவுகளோடு உக்ரைன் மரியுபோலை ஒப்பிட்ட ஷெலான்ஸ்கி!

namathufm

குளிர்சாதன பெட்டிக்குள் சிசுக்கள் !! பாரிஸ் புறநகரில் பெண் கைது!!

namathufm

Leave a Comment